நட்பு
![](https://eluthu.com/images/loading.gif)
தரணி எங்கும்
கீர்த்தி பொருந்திய நிலவொளியில்
மதுவுண்ண வண்டு
யாத்திரை செல்ல,
தேன் ரோஜா
தனித்து இருக்க,
பவித்திர நட்பால்
சங்கமித்தது இரண்டும்!
தேவை இருந்தாலும்,
சோதனைகள் இருந்தாலும்,
வேதனைகள் வந்தாலும்,
அங்கே
உறுதி போகாமல்
பூக்கும் என்றென்றும்!
நட்பு உதிரலாம் - ஆனால்
காய்ந்திடாது!
எம் நட்பு தொடரும் என்றென்றும்!