நாணல்
கடற்கரை வாயிலில்
நான் உன்
கரம் பிடித்து நகர்கையிலே;
நரகமான நாட்கள் எல்லாம்
நன்மதிப்புற நானும் கண்டேன்
அமைதி காத்தேன்!
ஆற்றுப்படுகையில் நாணலாய்
இருந்த என் காதல்
அறுபட்டு போகையில
ஆறு நாள் வேலையில
அணு அணுவா சித்திரவதை
அந்த ஆகாச சூரியனின்
அக்னியில்;
தவம் முடிந்து தவழ்ந்த
மழலை போல்
மண்ணில் மறுதோற்றம்
என் நாணலுக்கு
மணமுடிந்த நம்மை அதன்
மடியில் ஏற்கையிலே