காதல் விண்ணப்பம்

காதல் விண்ணப்பம் 🌹

யார் இந்த அற்புதம்!
யார் இந்த அழகு தேவதை!
யார் இந்த அழகோவியம்!
யார் இந்த அண்ண நடை பழகும் வண்ண மயில்!
நிலவு கால் முளைத்து மண்ணில் வந்த அதிசயம்!
கோடி மலர்கள் பார்த்த பரவசம்!
கண்களால் கவிதை பேசும் பேரழகி!
விழிகளால் பல வித்தை புரியும் சாகச சுந்தரி!
உன் மோகன பார்வையால் என் மனதை கொள்ளை அடித்த எழில் ஓவியமே!
என் இதயம் இனி என்னிடம் இல்லை.
அது உன்னிடம் வந்து வெகுநேரமாகிவிட்டது.
என் நெஞ்சில் கண நேரத்தில் குடியேறிய
என் காதல் கண்மனியே!
என் வாழ்க்கையின் கலங்கரை விளக்கமே!
என் மனம் என்னும் கோயிலில் உனக்கு ஆலயம் கட்ட
தொடங்கி விட்டேன்.
என் அன்றாட பூஜையில்
நான் வணங்கி துதி பாட போகும் என் காதல்
நாயகியே.
என் அன்பு காதலியே!
என் காதலை மறுக்காமல் ஏற்றுக்கொள்
மறுக்கமாட்டாய் என்ற
ஆழமான நம்பிக்கையில்
உன் மீது உலகளவு ஆசை வைதுள்ள
உன் அன்பு காதலன்.

- பாலு.

எழுதியவர் : பாலு (18-Jul-19, 7:10 am)
சேர்த்தது : balu
Tanglish : kaadhal vinnappam
பார்வை : 224

மேலே