நான்
பூங்காவில் காலை நடைப்பயிற்சியில் நான்,
பாதையில் காலில் தடைபட்டது ஓர் காகிதம்,
எடுத்துக் பார்த்தேன், அது ஒரு புதிய
இரண்டதாயிரம் ரூபாய்த் தாள்
கையில் எடுத்தேன், நடையைத் தொடர்ந்தேன்
நடை முடிய, தொடங்கிய இடத்தில் நான்;
கையில் இருந்த இரண்டாயிரம் ரூபாய்த் தாளை
அதே இடத்தில், எங்கு கண்டேனோ அங்கேயே
வைத்துவிட்டு நடையைக் கட்டினேன்
மடியிலும் மனத்திலும் இப்போது கனம் ஏதும் இல்லாது