மீண்டும் மழையாகி வா
பெரும் மழை
என்னவெல்லாம் செய்யும்
மனதை தவிர்த்து
மற்றதை எல்லாம்
தின்று தீர்க்கும் என்று
எப்போதோ படித்த ஞாபகம்
உண்மையென உணர்ந்தேன்
இப்போது
இதயம் வரை நனைத்த மழை
உயிர் வரை ஊடுருவ மறுக்கிறதே
காதலில் எப்படி இது நியாயம் ஆகும்?
அன்பே மீண்டும் மழையாகி வா.....!!!