காலம் என்ற வாகனம்
கட்டுப்படாமல் திமிரினாலும்
கச்சித வாழ்க்கை வாழ்ந்தாலும்
காலம் என்ற வாகனம் - உன்னை
கனந்தோறும் சுமந்துக் கொள்ளும்
கவலைகள் பல சூழ்ந்து - மனம்
காலவாய் போல் கொதிப்பினும்
காணும் நிகழ்வினால் மகிழ்ச்சி பொங்கி
கட்டுபாடின்றி தினம் குதுகளிப்பினும்
காட்டாற்று வெள்ளம் போல் - தன்
கரங்களினால் கட்டி இழுத்து
கலவையாய் கலந்து கரைத்து
கவின்மிகு நிலையை புகுத்திவிடும்
காலத்தின் திரிபு காலன் - வாழ்க்கை
களத்தில் தீமை நன்மை உன்னை காட்சிப்படுத்தும்
காலமும் காலனும் கணக்கிடுவதில்லை அதை
கவர்ச்சிக்காக வாழ்தல் என்பது பெரும் பிழையே.
---- நன்னாடன்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
