எனக்கு

காலம் எழுதிச்சென்ற
வரிகள்

படிக்க முடிகிறதா என்
முகத்தில்

கண்ட மாடுகள் மேய்ந்த
மேய்சல்

பயம் பழகிப் போனது
வலி மறத்துப் போனது

நாற்றமெடுக்கும் அந்த

மூன்று நாட்கள் கூட
எனக்கு

ஓய்விருந்ததில்லை

நரமாமிச பட்சிகளுக்கு

நாற்றமாவது மண்ணாவது

ஒரு சில நேரங்களில்
என்னை நானே

தேற்றிக் கொள்வேன்
என்னால்

ஒரு சில அபலைகள்

சீரழியாது தடுக்கப்பட்டதை
நினைத்து

என்னால் யார் காப்பாற்றப்
பட்டார்கள்

எனக்கது தெரியாது இன்று
என்னை

யார் காப்பாற்றுவர் அதுவும்
எனக்கு தெரியாது

இப்பொழுதெல்லாம் நான்

வேட்டைப் பொருளில்லை
வேண்டாப் பொருள்

கசக்கி எறியும் காகிதத்திற்கு
கூட

மறுசுழற்சி உண்டாம்
எனக்கு?

எழுதியவர் : நா.சேகர் (24-Jul-19, 6:59 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : enakku
பார்வை : 62

மேலே