நாதஸ்வரமும் நாகஸ்வரமும்
நாதஸ்வரம் நாகஸ்வரமானது அதன்
நாதம் புன்னாகவராளி ராகத்தில் அவர்
இசைக்க அந்த நாதம் கேட்டு எங்கிருந்தோ
வந்த ஓர் நாகம் அந்த இசைக்கேட்டு அதற்கேற்றாற்போல்
படம் விரித்து நாக நாட்டியமாட,,,,,
அரவத்திற்கு காதுகள் இல்லை என்பது
பழைய கதை, அவற்றிற்கு உள்ளமைந்த
காதுகள் உண்டு கேட்க என்கிறது இன்றைய
விஞான கண்டுபிடிப்பு …….. அன்று
நாவுக்கரசரும் மந்திரமாய் ஒரு தேவாரம் பாடி
அரவத்தால் கடிபட்டு இறந்தோனை அந்த
அரவமே மீண்டும் அவனைக்கொத்தி
விடமெல்லாம் எடுத்து உமிழ்ந்து அவன்
உயிர்பெற்றெழ செய்தது நாமறிந்த கதை
கதையெல்லாம் வெறும் கட்டுக் கதை அல்ல
தெரிந்துக்குக் கொள்வோம் நாம்