உனக்காக தானே
ஏண்டி புள்ளா
எதுக்கு புள்ள
இப்ப நீ வந்த
என் வாழ்க்கை உள்ள
சந்தோசம் இல்ல
சந்தேகம் துள்ள
இப்ப என் வாழ்வில்
நீ யேண்டி வந்த
சம்பந்தம் இல்லா
சங்கட வாழ்வில்
நான் இப்ப இங்க
வாளுறேன் பிள்ள
பொன் போல உன்ன
பாதேனே புள்ள
பொறந்த வீட்ட நம்பி
போனாயே புள்ள
சந்தனம் போல
வைதேனே உன்ன
சங்கடமின்றி
போனாயே புள்ள
சிற்ப மாய் உன்ன
செதுக்கிய பின்னே
சிட்டாய் நீயும்
பறந்தது என்ன
குற்றமே இல்லா
வாழ்கையை தானே
தந்தேன் என்றும்
உன்னிடம் தானே
சொர்க்கத்தை போன்ற
சொந்தத்தை தானே
இழக்க துணிந்தேன்
உனக்காக தானே
படுக்கை கூட
மறந்தே போனேன்
உன் மடியில் படுக்க
ஆசையில் தானே
பணியும் கூட
மறந்தே போனேன்
பாவிமக உன்
நினைப்பில் தானே