ஏரிக்கா கொளத்துக்கா

ஏன்டப்பா பொன்னையா, துபாயி போனவன் அஞ்சு வருசம் கழிச்சு நம்ம ஊருக்கு வந்திருக்கிற. உன் மனைவி கண்மணிக்குப் பொண்ணுப் பொறந்த தகவலை நீ தெரிவிச்ச. ஆனா அந்தக் கொழந்தையைப் பாக்கணுங்குற என்னோட ஆசை இன்னைக்குத்தான்டா நெறவேறுது. பொண்ணு ரொம்ப அழகா இருக்குதடா பொன்னையா. இவ பேரு என்னடா?
@@@@@@
எங்க பொண்ணுப் பேரு 'மலய்கா' பாட்டிம்மா.
@@@@@
மலைக்காவா? 'கிரி'-ன்னா 'மலை'ங்கிறாங்களே அந்த 'மலை'யா?
@@@@@@@
பாட்டிம்மா, நான்.வேலை பாத்த எடத்துல இந்தப் பேரு ரொம்ப பிரபலம். எனக்கும் கண்மணிக்கும் பிடிச்ச பேரு. அதனால 'மலய்கா'ன்னு எங்க செல்லத்துக்குப் பேரு வச்சுட்டோம். 'மலய்கா'ன்னா 'தேவதைகள்'ன்னு அர்த்தம் பாட்டிம்மா.
@@@@@@@
நல்ல அர்த்தம் தான். இன்னொரு பெண் கொழந்தை பொறந்தா அதுக்கு 'ஏரிக்கா, கொளத்துக்கா, கடலுக்கா, ஆத்துக்கா, கண்மாய்க்கா, கால்வாய்க்கா'ன்னா ஏதாவது ஒரு பேரை வைக்கப்போறீங்களா?
@@@@@
போங்க பாட்டிம்மா. உங்களுக்குப் பேருங்களக் கிண்டல் பண்ணறது கைவந்த கலையாகிப் போச்சு.

எழுதியவர் : மலர் (6-Aug-19, 2:47 pm)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 95

சிறந்த நகைச்சுவைகள்

மேலே