எனை மறப்பதுவேன்
எனை மறப்பதுவேன்
உனையே நினை கொண்டேன்
நெஞ்சுக்குள் சுமந்துகொண்டேன்
சுயநினைவாய் உனையே கொண்டேன் ...யாரடி
விழுதுபோல விலகாதிருப்பேன்
விழிக்கும்போதும் இமைக்காதிருப்பேன்
வளி நெடுக்க நத்தை கூடாவேன் ..
வழிநெடுக்க வாழ்த்துமடல் ஆவேன்
உறையவைத்தாய் ஒரு விழிப்பொழுதில்
இனியொரு நொடிப்பொழுதும்
விழாவாகும் உருகுவதனிலே
கரையும் நொடி இனி உறைந்துவிடும்
உனை கண்டால் தான் உயிர்கொள்ளும்
கண்டதும் துள்ளிவரும் கன்றாவேன்
கரம் சேர்ந்தால் காதலுக்கு பொருளாவேன்
கொஞ்சும் மொழி கிடைத்தால்
பஞ்சணையின் நிழலாவேன் ..
கொஞ்சும் மொழியே கெஞ்சும் உன்னிடம்
வா பைங்கிளியே எனை மறப்பதுவேன் !