காதல் தினமே

இவன் என்றும் அறியாமல்
அவன் என்றும் அறியாமல்
காண்கின்ற ஆணவனையெல்லாம் என்னவனாே..! என அறியாது...?
நான் மனதில் வரைந்த ஒப்பற்ற ஓவியமாய்.......!

நான் பார்க்கும் முதல் பார்வையிலே
உன்னவள் நானென உன்தாேல் சாய வேண்டும்
ஊரிலில்லா அன்பையெல்லாம் உன்னிடமே காட்ட வேண்டும்
ஒற்றை பார்வையாய் ஒரு நாெடிக்காெருமுறை பார்க்க வேண்டும்
என்னை கேட்காமல் ஏக்கங்கள் தீர்க்க வேண்டும்
ஆயிரம் கவிதைகளாய் என்
மனதில் நான் காெண்ட ஆண்மகனை
நான் கண்ட இந்நாள்......(13.08.2015)

அவன்
என் முன்னே
யாராே ஒருவனப்பாேல்
கூட்டத்தில் ஒருவனாய்
கண் முன்னே வந்து நின்றான்
என் மனம் பார்த்த மன்னவனாய் அவன்.....
நாம் பார்த்த முதல் பார்வை
இன்றளவும் மறையாதே.....!


" அன்பெனும் வீட்டில்
" ஆறாத காதலாேடும்
" இச்சை தீர்க்கும் முத்தத்திற்கு
" ஈகையாேடு காத்திருக்கும் உன்னவளுக்காக
உன்னை காணத்துடிக்கும்
" ஊற்றாய் நிரம்பிய கண்களாேடு
" என்னவன் வருவான் எனும்
" ஏக்கத்துடன் காத்திருக்கும்
" உன்னவளுக்காக
" ஐய்யம் விட்டு வா தலைவா
" ஒன்றாய் வாழ்வதற்க்கு
" ஓயாத காதலாேடு

காத்திருக்கும் உன்னவளுக்காக
ஒரு முறை காண்பாயாே.....?

எழுதியவர் : பிரியா (13-Aug-19, 12:33 am)
சேர்த்தது : பிரியா
Tanglish : kaadhal thiname
பார்வை : 126

மேலே