மயிலும் இவளும்

அது மயில்
இவள் மையல்
கொள்ளும் மயில்

அதற்கு அலகிருக்கும்
இவளுக்கு அழகிற்கும்

மயிலிறகை புத்தகத்தில்
வைத்தால் குட்டி போடும்
இவளை புத்தான அகத்தில்
வைத்தால் மெட்டி போடுவாள்

மயிலுக்கு
இந்தியாவில் தோகை
இருக்கும்
இவளுக்கு
இந்தியில் தோ கை
இருக்கும்

மயில் ஆடினால்
மழை வரும்
மழை வந்தால்
இவள் ஆடுவாள்

அது தேசியப்பறவை
இவள் என்னோடு
பேசியப் பறவை

அது வனத்தில் இருக்கும்
இவள் வனப்பாய் இருப்பாள்

இருவருமே தன்
தேவைக்காக
ஒற்றைக்காலில் நிற்பவர்கள்

இதன் தோகை
காயம் பட்ட இதயத்தில்
மருந்திடுகிறது
இவள் இதயத்தைக்
காயம் செய்பவள்

இருவருமே அழகு
என்பதால்
மயில் நாட்டுக்கூண்டில்
இவள் வீட்டுக் கூண்டில்

மயில் பறக்கும்
இவளும் பரப்பாள்
நேரமாகிறதென்று

பெண்ணே
தேசிய சின்னத்தை
மயிலிடம் மயிரிழையில்
இழந்தவளே

போட்டி நாளன்று
மழைநாளோ
அவை தொகை
விரிக்க பாவம்
நீ என்ன செய்வாய்

தோகை இருந்திருந்தால்
தோற்று இருப்பாயோ
மயிலிடம்

எழுதியவர் : புதுவைக் குமார் (13-Aug-19, 5:52 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : mayilum ivalum
பார்வை : 200

மேலே