காவியக்காதல்

தேவி என சுற்றுபவனை
காவி அணிய வைப்பதே காவியக்காதல்

மாம்பழத்தில் வண்டு
இருப்பதைப்போல
என் மாமனத்தில்
அவள் வந்து இருந்தாள்

அவள் நடந்தபோது
சாதாரண தார் சாலை
வாழைத் தார்சாலை ஆனது

அவள் சமைத்த
உணவில் ஈ அமராது
தேனீ மட்டுமே அமர்ந்தது

அவள் குளித்த நதி
விவசாயி பயிரை
பட்டினிபோட்ட
தன் பாவங்களைக்
கழுவிக்கொண்டு
சுத்தமானது

இரு கல் நெஞ்சங்களை
ஒட்டவைக்கும்
சுண்ணாம்புதான் காதல்

காவியக்காதலின்
அனில்
கைபேசி

காதலும் வானவில்லும்
ஒன்றுதான்
இரண்டுமே ஒளியின்றி
இருப்பதில்லை

எழுதியவர் : புதுவை குமார் (13-Aug-19, 6:49 am)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 218

மேலே