இவர்கள் சேவை நாட்டிற்கு தேவை

நமது நாட்டின் எல்லையில்
இருபத்திநாலு மணி நேரமும்
கண்ணுறங்காது உண்ணாமல்
காவல் காக்கின்றார் வீரர்கள்
நம் ராணுவ வீரர்கள் …….
இவர்களில் சிலர் நாட்டுக்காக
உயிர் துறக்கும் தியாகிகள் …
இவர்களில் சிலர் தம் பெற்றோர்க்கு
ஒரே பிள்ளை …..

இது இப்படி இருக்க ….
நாட்டின் பல்வேறு இடங்களில், பெண்களின்
கற்பை சூறையாடுகிறார் சிலர்
இவர்களும் உறங்குவதில்லை
நரிகள்போல் இருபத்தி நன்கு மணி நேரமும்
மோப்பம் பிடித்து பெண்களைத் தேடி
அலைகிறார்கள் இவர்கள்….
நாட்டின் எல்லையைக் காக்கும் வீரர்களே
கொஞ்சம் நாட்டிற்குள்ளேயும் உங்கள்
காவலை நிலை நாட்டுங்கள் இந்த
கட்டுக்கடங்கா நரிகளை காணாமல் செய்து
ஒழுக்கமான கன்னியர்கள் நாட்டில்
எந்நேரமும் தலை நிமிர்ந்து நடக்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (15-Aug-19, 8:23 pm)
பார்வை : 93

மேலே