நிறுத்திவிடாதே

சிறுதூறலில் இளகிய

கட்டாந்தரையாய் இளகி
நிற்கிறேன்

உன் அன்புச் சாரலில்

உருட்டி பிடித்து
விளையாடிக்கொள்

சிறுத்தூறலை மட்டும்
நிறுத்தி விடாதே

கட்டாந்தரையாய் மாற
வேண்டாமெனக்கு

எழுதியவர் : நா.சேகர் (16-Aug-19, 8:08 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 87

மேலே