இரக்கமில்லா புயல்

இரக்கமில்லா புயல்
வீசி, அடித்து நொறுக்கி ஓய்ந்தது
இடிந்த ஒட்டு வீட்டுக்குள்
அபலையின் அழுகை
காற்றோடு காதில் விழுந்தது
புயலாய்ப் பாய்ந்து புயலில்
இருளில் கற்பழிக்கப்பட்டாள்
புலர்ந்தது காலை ……
யாரென்றும் தெரியாது இன்னும்
அழுது கொண்டிருக்கிறாள்
இரக்கமில்லா புயல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (19-Aug-19, 4:50 pm)
பார்வை : 110

மேலே