கடல்

ஆர்ப்பரிக்கும் அலை கொண்டு வருகிறாய்
சுவடுகள் ஆயிரம் கொண்டு செல்கிறாய்
வெறுமையில் ஏங்கி உன் முன் நிற்கிறேன்
மேனி சிலிர்க்கும் படி பல வண்ணங்கள் தருகிறாய்
எண்ணங்கள் யாவும் அழுக்கை இருக்கையில்
உன் அலை தந்து உன்னுள்ளே இழுத்து செல்கிறாய்
என்னை புனிதமடைய செய்கிறாய்

சில சமயம் அமைதியாய் நீள்கிறாய்
சில சமயம் அழ வைத்து செல்கிறாய்

உன் கரையோடு நான் நடக்க
காற்றோடு உப்பும் சேர்ந்து வீச
படகுகள் தோறும் உன்னுள் வர துடிக்க
நீல வானம் உன்மேல் நிறம் பூச
நான் கட்டிய மணல் வீடுகள்
அலையோடு அலையாய் போக
இவை அனைத்தையும் நான்
விழிகள் கொண்டு தான் ரசிக்க
உன்னை இந்த பூமிக்கு அளித்த
இயற்கை அன்னைக்கு நன்றி
ஆயிரம் முறை உன்னை பார்த்தாலும்
இமைகள் மூட மறுக்கிறதே
நீ என்றும் அழகு தான்...
விளக்க முடியா அழகு தான்..

எழுதியவர் : கா.மணிகண்டன் (19-Aug-19, 10:16 pm)
சேர்த்தது : மணி ராக்ஸ்
Tanglish : kadal
பார்வை : 420

மேலே