வானவில்

இந்திரன் தீட்டிய ரங்கோலி வானவில்
சூரியனும் வருணனும் இந்த வண்ண
வண்ண கோல வில் வரைய இந்திரனுக்குதவி
வானத்தில் தீட்டிய வண்ண கோலமிது
மண்ணில் மாதர் போடும் கோலம்போல்
இந்திரனின் கோலமும் அழியும், காணாமல்போகும்
மீண்டும் தீட்ட மீண்டும் அழகாய் வந்திடும்
இந்திரனின் கோலம் விண்ணையும் மண்ணோடு சேர்க்கும்
சேர்ப்பதுபோல் காட்சி தந்து மறைந்துபோகும்
இஜ்ஜகத்தில் காண்பதெல்லாம் அழகே ஆயின்
அவை அத்தனையும் மாயை என்பது
நமக்கு விளக்க இந்திரனின் ஜாலம் இது
அதுவே வானவில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (21-Aug-19, 4:03 pm)
Tanglish : vaanavil
பார்வை : 100

மேலே