பட்டமும் பருந்தும்

காத்தாடி
உயர உயர பறக்குது
மேலும் கீழுமாய்
இடமும் வலமுமாய்
நூலில் கட்டப்பட்ட அது
அவன் கைவண்ணத்தால்
ஒரு 'காகிதப் பறவையாய் '
வானத்தில்….
அந்த பருத்த பருந்து
உயர உயர பறக்க
தன்னை விட உயரமாய்ப் பறக்கும்
அந்த பட்டதை பார்த்தது
இதென்ன ஓர் புதிய பறவை
நம்மை போலவே உயர உயர
பறக்கின்றதே ……?
என்று நினைத்ததா
இதோ அந்த பருந்து
வானத்தில் எங்கோ சுற்றிக்கொண்டிருந்த அது
நேராக பட்டத்தை அலகால் கொத்த
காகிதப் பறவை அது பாவம்
உரு தெரியாது கிழிந்தது
வெறியில் பட்டத்தை தாக்கிய பருந்து
பாவம் அதன் கால்கள் பட்டத்தின்
'மாஞ்சா நூலால்' அறுக்கப்பட்ட
கீழே விழுந்து துடித்து செத்தது
பொய்யை நிஜமாய் நினைத்த
பருந்தின் முடிவு ……...

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (22-Aug-19, 2:27 pm)
பார்வை : 92

மேலே