மலர்
மொட்டெனும் மூடிய பூவாடையில் மலரே
நீ பாவாடையில் பார்த்த பூப்பெய்தா கன்னி
மொட்டவிழ்ந்து இதழ்கள் மெல்ல அலர்ந்திட
நீ பூப்பெய்திய இளமங்கை கன்னி
மணம் பரப்பி சிரிக்கும் பூவாய் நீ
மணந்து மன்னனுடன் மகிழும் மங்கையாய்
காய்ந்து உதிர்ந்து போகும் நிலையில்
உன்னைக்காண துணியா என் மனம்….
என் மனதில் கண்ணீர் துளிகள் உதிர்துளிகள்
கால சக்கரத்தில் காலனைக் காண வைக்கிறாய்
மலரே உந்தன் பொலி விழந்து நீ உதிரிகையில்
மங்கை தன பயணம் முடித்து மறையும்போது