வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன்
உள்ளமதில் உன் நினைவு
அருவியாய் ஊற்றெடுக்கும்
ஒவ்வொரு தடவையும்
ஏக்கப் பெருமூச்சு எரிமலையாய்
வெளியேற
காதலான காதல் வாழ்க்கை
கனவாகி போனதனால்
கலங்கிய நெஞ்சம்
வார்த்தை கத்தி கொண்டு
வீசி வெட்டியதால் என் இதயப்பூங்கா ரணமாகி விட்டதய்யா
நீண்ட நாளும் நீயும்
நீடூழி வாழுமையா

எழுதியவர் : அஸ்லா அலி (31-Aug-19, 12:59 pm)
சேர்த்தது : அஸ்லா அலி
Tanglish : vazhga valamudan
பார்வை : 116

மேலே