பெண்ணே

பெண்ணே. .

பெண்ணே. . . பேரண்டமே. ..
பெண்மைக்குள் ஆண்மை
ஆண்மைக்குள் பெண்மை
ஈதொரு புதிரான உண்மை

சக்திகளின் திரள் நீயென்றால்
சகியே. . . மறுப்பவர் உண்டோ இங்கே
சிவனின் பாதி நீயென்றால்
ஜீவனின் மீதியும் நீயன்றோ

அணுக்களாய் உன்னில்
அடுக்கடுக்காய் திறமைகள்
பல்நோக்கு திறமைகளின்
பல்கலைக்கழகமே. . .

இயலாததை மட்டும் எண்ணியேன்
வெம்புகிறாய் - எல்லாம் உன்னிலிருப்பதை
ஏற்க மறுக்கிறாய் - நீ
எழுந்தால் எரிமலை
ஓடினால் நதி - கோபித்தால் புயல்
வீசினால் தென்றல்

மண்ணாய் மலையாய்
மலராய் மணமாய் - எங்கும்
நீக்கமற நிறைந்திருப்பவள் நீயே
நிலைகுலையாதே - நீ
தலைகுனிந்த காலம் தடம்மாறி போனது
திரும்பிப்பார் - உன்போன்ற
வீரப்பெண்மணிகள் விட்டுச்சென்ற
சாதனை தடயங்கள் ஏராளம் ஏராளம் !

இன்னும் ஏன் மரபுவேலிக்குள் ?
தேவை உள்ளவரை தேடல் முடிவதில்லை
நம்பிக்கை உள்ளவரை
வெற்றியில் தோல்வியில்லை

இருபத்தோராம் நூற்றாண்டின்
இளம்பிறையே. .. வளர்பிறையே . .
இனிவேண்டாம் உன்னில் தேய்பிறையே
விண்ணொளிக்கட்டும் உன் வீரசாதனைகள்

முயன்று பார்
சுழன்று வரும் பூமியும்
கழன்று விழும்
உன் காலடியில் !
இவன் மு. ஏழுமலை

எழுதியவர் : மு. ஏழுமலை (31-Aug-19, 2:00 pm)
Tanglish : penne
பார்வை : 171

மேலே