விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி
அருகம் புல்லினால் ஆசனம் அமைத்து
அழகான மலர்களினால் அலங்காரம் செய்து
எருக்கம் பூ கொண்டு மாலை தொடுத்து
பஞ்சினால் செய்த முப்புரிநூல் அணிவித்து
காகிதக் குடையும் குந்துமணி கண்களும் வைத்து
பலகையில் கோலமிட்டு மேடை தனை கட்டி
பலவித பத்திரங்கள் தோரணமாக அழகூட்ட
கொழுக்கட்டையும் பழமும் நெய்வேத்தியமாக
வினையருக்கும் விநாயகனைத் தொழுது பூஜை செய்து
சங்கடங்கள் தீர வேண்டுமென இன்னாளில்
விநாயகர் சதுர்த்தி எனக் கூறி விழாவாக்கி வணங்கி
வாரம் முழுதும் இசையுடன் கோலாகலமாய் துதித்து
இறுதியில் கடலில் கரைத்து மீண்டும் வருவாய் எனக்கூறி
குவலயம் முழுதும் கொண்டாடிடும் நாள் இதுவே !

எழுதியவர் : கே என் ராம் (3-Sep-19, 3:06 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 59

மேலே