தோற்கவில்லை

சில நொடிகளில் அனைவரின்
எதிர்பார்ப்பும்

புதிய சொர்க்கம் நிர்மாணிக்க
முயற்சித்து தோற்ற

கௌசிகனின் மனநிலையாக

தோற்கவில்லை கௌசிகன் நமக்கு
திரிசங்கை காட்டியதால்

அன்று கதையாய் கேட்டதை
நிசமாக்க இன்று

சந்திரயான் வந்தான் நமக்கான சொர்க்கம்காணப் போனான்

கண்ணால் கண்ட சொர்க்கத்தை
சுற்றிவந்த

நிதர்சன உண்மையை தகவலாய் சொன்னான்

யாரும் தொடாத கன்னியை தொடப் போவதை

உலகம் பார்க்க செய்தான்

மெல்ல மெல்ல தன் முயற்சியில்
ஏற்பட்ட

எதிர்பாரா சங்கடத்தில் ஊமை
ஆனான்

தோல்வி தந்த வீரியம் துவளாத
சத்ரியன்

பிரம்மரிஷியாகும் போது நாம்
மட்டும் என்ன

முயற்சியில் சளைத்தவர்களா

தென்துருவக் கன்னியை தொடும்
வரை

முயற்சிப்போம் சத்ரிய
கௌசிகனாய்..,

எழுதியவர் : நா.சேகர் (7-Sep-19, 1:34 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 824

மேலே