அர்ச்சனை பூக்களாய் சிதறியதே - இசையென்னும் கவிதை 16

“அர்ச்சனை பூக்களாய் சிதறியதே”
இசையென்னும் கவிதை: 16
(With English translation in the end)

இல்லாள் கூந்தலிலே இயற்கையிலே
மணம் கொடுப்பாய் எனஎண்ணி
பக்குவமாய் பிச்சிப்பூவினை பறித்தெடுத்தேன்

பாங்குடனே எந்தன் கரங்களில்
மார்போடு அணைத்து முதிர்காதலினால்
அவளருகே புன்னைகையுடன் நீட்டிநின்றேன்

எங்கிருந்தோ வந்ததென்றலால் பூமாதேவியின்
பாதங்களில் அர்ச்சனைபூக்களாய் சிதறியதே
ஓணத்திருநாளில் பூக்கோலம் நான்படைத்தேன்

பூமாதேவிக்கு நான்படைத்தேன் பூக்கோலம்
அன்னைக்கு நான்படைத்தேன் பாக்கோலம்
காத்தருள்வாய் எங்கள் தாயே

Thinking that the jasmine flowers will add fragrance naturally to wife's long hair, I carefully plucked the flowers and keeping the handful of flowers close to my heart and with old age love extended the flowers to her. Just then came a the gentle breeze and took the flowers as offerings to mother earth. I have decorated mother earth not only with flowers on this Onam festival but also with my poetic verse. Please bless us all on this Onami festival.
(இதனை இசையோடு காண யூ டுப் இணையதளத்தில் - https://youtu.be/g8oR-hlEkBM

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (11-Sep-19, 8:58 am)
பார்வை : 36

மேலே