கரம் பற்றி
கரம் பற்றி விழி பார்க்கையில்
காதல் தனை என்னுள் விதைக்கிறாய்
இறுக உன் இடைப்பற்றி
அணைக்கையில்
உன் வசமிழந்து
என் தோள் சரிகிறாய்
நிலைக்குலைந்து
என் பெயர் கிசுகிசுக்கிறாய்
பெயர் உச்சரித்த இதழ் தனை
என் இதழ் கொண்டு அணைத்து
ஆசுவாசமளிக்கிறேன்