இருளிலும் ஒளிர்ந்தாய்
திசையற்று கிடந்தேன்
உன் காலடித்தடங்கள் காட்டினாய்
பின் தொடர்ந்த்தென்னை
அவ்வரையுள் பூட்டினாய்
இருள் சூழ கிடந்தேன்
உன் சுவாந்தினூடே வழி காட்டினாய்
உனை நெருங்க
உன் ஸ்பரிசம் கொண்டெனை இழுத்தாய்
நெருங்கிய என் தேகந்தனில்
ஓர் பயணம் நிகழத்தினாய்
என் வசமிழந்து நினை பற்றினேன்
முனகலோடு எனை அணைத்தாய்
உன் அணைப்பில் கண்மூடினேன்
நீ சூழ்ந்த இருளிலும் ஒளிர்ந்தாய்!