காதல்

எனக்கு அவள் மீது காதல்
அதை என் நெஞ்சம்தான் அறியும்
அவள் என்னை ஒருமுறைப் பார்த்தாள்
அந்த பார்வையின் பொருள் நான்
அறியவில்லையே …..நான் என் செய்வேன்
என் மனமே , ஆனால் எனக்கு
அவள் மீது காதல் அதை
என் நெஞ்சம்தான் அறியும் அவள் அறிவாளோ
நான் அறியேனே …..
இப்படி தினமும் அவளை பார்த்த நான் ….
இன்று மனம் திடப்படுத்திக்கொண்டு எப்படியும்
அவளோடு பேசுவதென்று முடிவுபண்ணி
கையில் ஒரு சிவப்பு ரோஜா செண்டோடு
அவளை நோக்கி போக…. இடையில் ஒரு
வண்டி வந்து சற்றே அவளை மறைக்க..
வண்டி சென்றது ….. அவளை நான் பார்த்தேன்
என்னை அவள் இப்போது பார்க்கவில்லை
அவள் கைகளில் ஒரு சிவப்பு ரோஜா செண்டு
அதைப் பார்த்து மகிழ்ந்து அவள்
எதிரே நின்ற அந்த அழகனுக்கு புன்முறுவல்
தந்தாள்…….. அதிர்ந்துபோனேன் நான்
என் கையிலிருந்த ரோஜா செண்டு
கீழே விழுந்தது
அவன் முந்திக்கொண்டான் …. எனக்காக
அவள் ஒரு வேளை காத்திருந்தாளோ……
அதையும் நான் அறியவில்லை
எனக்கும் அவளுக்கும் இடையே
ஒரே ஒரு பார்வை பரிமாற்றம் இருந்திருக்க
அதை நான் அவள் காதல் என்று
புரிந்துகொள்ளாதது ….???
அவன் மீது அவள் பார்வை
அவன் புரிந்துகொண்டான்
என்னை முந்தினான் அவள் காதல்
அவன் பெற்றான் ……..
என் மனதில் அவள்….எப்படி மறந்திடுவேன்
காலமே நீயே சொல்லு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (14-Sep-19, 1:37 pm)
Tanglish : kaadhal
பார்வை : 65

மேலே