போராட்டம்
ஒரு நொடியில் அடங்கி விடும்
துடிக்கும் இந்த நாடி
இருந்தும் மனம்
போடும் நூறு ஆட்டம்..!!
எதற்குப் பின்னரோ
ஏக்கத்துடன் இங்கு
பலருக்கும்
பல பல ஓட்டம் ...!!
வந்ததும்
வருவதும்
நிலைக்காத பொழுது
ஏன் இத்தனை
கோமாளிதன போராட்டம்...??
கோடி சேர்த்தாலும்
புகழின் உச்சியில் நின்றாலும்
மரணம் ஒரு நாள்
உன்னைத் திண்ணும்....!!
முடிவு என்ற ஒன்றே
இங்கு நிரந்தரம்
அதைப் புரிந்தால் மட்டுமே
அமைதி நிலை பெறும்...!!
என்றும்.. என்றென்றும் ..
ஜீவன்✊✊