நான் பிழைத்திருப்பேன்…யார் பிழை இது

உனது திருமண நிகழ்வை
உன் உறவுகளுக்கு மட்டும்
அழைப்பிதழ் மூலம் தெரியப்படுத்தியிருந்தால்
நான் பிழைத்திருப்பேன்….

சாலை எங்கும் பேனர் வைத்து
உன் திருமணத்தைக் கூட
விளம்பரம் செய்ததற்கு பதில்
மரக்கன்று சில சாலை ஓரம்
நட்டிருந்தால்
நான் பிழைத்திருப்பேன் …

அரசியல் என்பது வியாபாரம் அல்ல
விளம்பரப்படுத்திக் கொள்ள,,
அது மக்களுக்கான சேவை
நாட்டின் வளர்ச்சிக்கான பாதை
என அரசாங்கம் நினைத்திருந்தால்
நான் பிழைத்திருப்பேன் ….

ஊருக்குள் 30 கி.மீ வேகத்தில் தான்
வாகனம் செல்லவேண்டும் என்ற
விதியை என் பின்னே என்
விதி எடுக்க வந்திருந்த லாரி ஓட்டுநர்
பின்பற்றியிருந்தால்
நான் பிழைத்திருப்பேன்…

இரத்த வெள்ளத்தில் சாய்ந்து
என் உயிர்
என் வாழ்வு
என் பெற்றோரின் கனவு
எல்லாம் மெல்ல மெல்ல என்னை விட்டுப்
போய்க்கொண்டிருக்க ஆம்புலன்ஸ்
அழைத்த சமயம் வந்திருந்தால்
நான் பிழைத்திருப்பேன்…

என்னை காப்பாற்ற மாட்டீர்களா jQuery17107493209167443293_1569105928043
என நான் கை தூக்கிக் கெஞ்சிட
சுற்றி வேடிக்கை பார்த்த மக்கள் கூடத்தில்
என்னைத் தூக்கிச் செல்ல சிலர் வந்திருந்தால்
நான் பிழைத்திருப்பேன்…

குறைந்தது என் உயிர் போவதை
நூறு பேருக்கு மேல்
கூடி நின்னு வேடிக்கை பார்த்தனர்
சில காவல் துறையினர்
புகைப்படங் கூடஎடுத்தனர் …

அந்த நிமிடம் எனக்கு
மரண வலி தெரியவில்லை
என் மனம் தான் வலித்தது
இந்த மனம் இல்லா
மனிதர்கள் மத்தியிலா இத்தனை
காலம் வாழ்ந்தோம் என
மரணத்தை நேசிக்க ஆரம்பித்தேன்!!
இருந்தும் துடித்துக் கொண்டிருந்தேன்
இரத்தவெள்ளத்தில் தெருவோரம் ….

ஒரு பெண்ணை கும்பலாக
மானபங்கம் படுத்துவதும்
ஒரு உயிரைக் காக்க முன்வராமல்
வேடிக்கைப் பார்ப்பவர்களுக்கும்
என்ன வித்தியசம் ??
இந்த உலகிலா நீ
வாழ துடிக்கிறாய் -போதும்
நீ வந்துவிடு என யாரோ அழைப்பது
எனக்கு கேட்டது

வயதான என்
பெறோர்களுக்கு நான்
ஒற்றை பிள்ளை
இந்த மானங்கெட்ட மனிதர்களின்
மத்தியில் எப்படி விட்டுச்செல்வேன்
இரத்தத்துடன் கண்ணீரும்
சேர்ந்து வடிந்தது ….

நமது ஊரில்
ஒவ்வொருச் சட்டத்தையும்
அமுல் படுத்த
உயிர் பலி என்ன
நேத்திக்கடனா ???
அடிபட்டு சிதைந்த
இதயம் கேட்டது

பல கனவுடன்
மனம் உள்ள மக்கள்
வாழும் கனடா செல்ல
புறப்பட்ட என்னை
என் வாழ்வு ஆரம்பிக்கும்
முன்னரே முடித்து,
என் உயிர் துடி துடித்த
30 நிமிட போராட்டத்தை
வேடிக்கை பார்த்து,
அதை சிலர் வீடியோவிலும்
பதிவு செய்து,
பின் என்னை
அனுப்பி வைத்த
ஈரநெஞ்சம் கொண்ட மக்களுக்கு
நன்றி ….

எனது சாவையும்
விளம்பரம் படுத்தாமல்
இனியாவது
இன்னோரு இன்னுயிர்
போகாமல் பார்த்துக்கொள்வீர்களா ??
இல்லை
இதுபோல
பல விபத்து
பல சாவு நாங்கள் தினமும்
வேடிக்கை பார்க்கத்தான் செய்கிறோம்
என கடந்து செல்வீர்களா ..???
தெரியவில்லை …!!!

ஆனால்
இந்த சுயநலம் பிடித்த
மக்கள் மத்தியில்
வாழ்வதை விட
மாள்வதே மேல்
என்ற கோவத்துடனும் ……

பாவம் என் பெற்றோர்கள்
வாழும் ஒவ்வொரு நொடியும்
மரணத்தை அனுபவிப்பார்களே
என்ற வலியுடனும்

அடுத்த ஜென்மத்திலாவது
மக்கள் வாழும்
பகுதியில்
மக்களுக்கான ஆட்சி
நடக்கும் பகுதியில்
அந்த இறைவன்
என்னைப் படைப்பான்
என்கிற ஏக்கத்துடனும்
விட்டுப் பிரிகிறேன் …

என்றும்….என்றென்றும் ...
சுபஸ்ரீ
(கண்ணீருடன் ஜீவன்)

எழுதியவர் : ஜீவன்.. (18-Sep-19, 3:55 am)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 59

மேலே