மனிதனின் வாழ்கை
மனிதனின் உறக்கம் இறப்பின் பகுதி...
இறப்பு என்பது கறைபடியாத உறக்கம் ...
வாழ்கை அதன் பாதையில் செல்லும்
மற்றவரை நம்பிவாழ்ந்தால்
இரங்கல் மட்டுமே நிலைக்கும் ...
பொழுது புலரும், மாலைமயங்கும்
வாழ்க்கையின் வயதில் ஓர்நாள் குறையும்
ஒருசிலர் அழுது பாரத்தைக் குறைப்பார்...
ஒருவர் சிரித்து வேதனையை மறைப்பார்...
வாழ்கைப்புயலின் விளையாட்டில் - உயிருள்ள
மனிதன், நீரில் மூழ்கக் கண்டேன் - ஆனால்
இறந்த சடலம் நீரில் மிதக்கண்டேன் ...
நான் கண்ட வாழ்கை ஒர்
பேருந்து நடத்துனர் போலாகிவிட்டது
பயணம் தினமும் உண்டு - ஆனால்
போகுமிடம் எங்கென்று இல்லை .....