18 + பிடிக்காதவர்கள் கடந்துவிடவும்

பொதிந்திருக்கும் வெள்ளமொன்று
புறப்படுகையில்
நாம் அதி உச்சத்தில் இருப்போம்
வேட்க்கைகளின் கோரப்பசிக்கு
இரையாகி களைப்புற்று
நான் படகாவேன்- நீ
கடலாவாய்
வாசம் கடந்த வேர்வை துளிகள்
சுவாசம் இழந்த பெருமூச்சுக்கள்
மொழிகள் மருளும் மௌன முனகல்கள்
வழியே
ஒரு பெருங்காப்பியம் வரையப்படும்
உலகை விழுங்கும் பேராவலுடன்
நீ கிடக்க
கார்காலப்பெரு மழையாய் நான்.
நாம் உடையும்பொழுது..
உயிர் துடிக்க
உனை எழுப்பி
கரங்களுக்குள் புதைத்தது வைத்தால்
காலடியில் சொர்க்கம் ஒன்று
மெதுமெதுவாய் நழுவுகிறது...

எழுதியவர் : M.Rafiq (18-Sep-19, 5:25 pm)
சேர்த்தது : Rafiq
பார்வை : 360

மேலே