அவள் நிகழ்த்தும் ஆச்சர்யங்கள்

எனக்குனை
கட்டிக்கொள்ள
வேண்டும் போல
முத்தம் இட்டுக்கொள்ள
வேண்டும் போல
உன்னில் கலந்து
காணாமல் போக
வேண்டும் போல
ஆசையாயிருக்கிறது
என்றொருத்தி சொல்கையில்
அதில்
உடற்ப்ரேமையின் நிழல்கள் கூட
படிவதில்லை

அன்பினால்
அவள் நிகழ்த்தும்
ஆச்சர்யங்களில் இஃதொன்று!


எழுதியவர் : தீப்சந்தினி (19-Sep-19, 9:28 am)
சேர்த்தது : தீப்சந்தினி
பார்வை : 69

மேலே