புத்தனின் புத்தகம் கையில் புன்னகைப் புத்தகம் எதிரே

புத்தகத்தை திருப்பினேன்
தத்துவங்கள் ....புரியவில்லை
மூடி வைத்து விட்டேன்
மற்றொரு புத்தகத்தை எடுத்தேன்
சரித்திரம் ....சிவந்த பக்கங்களை
பள்ளியில் படித்தது போதாதா
திரும்ப வைத்துவிட்டேன்
அழகிய அட்டைப்பட புத்தகத்தை எடுத்தேன்
கபிலவஸ்து காருண்ய மூர்த்தியின் முகத்திலிருந்து
கருணா நதி நெஞ்சில் பாய்ந்தது ...போதுமே
அதையும் திருப்பாமல் திரும்ப வைக்கப் போனபோது
நூலகத்தின் செல் ஃ பின் இடைவெளியில்
மறுபுறம் புன்னகை புத்தகம் ஒன்று நிற்கக் கண்டேன்
புத்தனின் புத்தகம் கையில் புன்னகைப் புத்தகம் எதிரே
பார்த்தேன்..ஏதோ புத்தகத்தில் ஆழ்ந்திருந்தாள் ரசித்தேன்
கவனம் திரும்பியவள் ஓரவிழியால் பார்த்தல்
வெறுமனே பார்த்துக் கொண்டிராதே
கவிதை எழுதி படித்துப் பார் என்று சொல்வதுபோல் இருந்தது
சரிதானே ?

எழுதியவர் : கவின் சாரலன் (22-Sep-19, 10:25 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 62

மேலே