காதலியின் எழிலும் காதலனின் தவிப்பும்

பொற்றாமரை மலர் தாங்கி
கொடியசைந்து நடக்குதே!

மூன்று தமிழ் சொற்களெல்லாம் புனலோட இதனழகில் தவிக்குதே!

மென்சிரிப்பில் இதழ் விரிந்து
தென்றலாட மணக்குதே!

குருதி நாளங்களில் மீட்டும்
இன்னிசை யன்னையோ யென்னோடு இதனழகில் மயங்குதே!

கம்பனின் வனப்பும் பாரதியின் பேனாமிடுக்கும் வேள்விழியால் எழில்கூட்டுதே!

மொழிப் பெயர்க்க வியலா மௌனத்தை மின்னலைகள் வீழ்த்துதே!

விசும்பில் அலைகளாய் நடனமிடும் சிலநூறு பறவைகள் போல் கார்மேக கூந்தலானதே!

அலையோடும் மனக்கடலில் துள்ளியெழும் வரிகள் கவிதையாகுதே!

எழுதியவர் : ச. செந்தில் குமார் (23-Sep-19, 10:15 pm)
சேர்த்தது : ச செந்தில் குமார்
பார்வை : 205

மேலே