தேடல்

எதை தேடுது என் கண்கள்
உன்னிடத்தில்

நீ மறைக்காது நின்ற போதும்
என்னிடத்தில்

எந்த மாற்றமும் இல்லை

தீவிர தேடல் என் கண்களில்

ஒவ்வொரு முறையும் என் தேடல்

தோற்று விடும் சில மணித்
துளிகளில்

அசந்துப் போய் கண்ணயர்ந்துப்
போகும்..,

எழுதியவர் : நா.சேகர் (7-Oct-19, 5:17 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : thedal
பார்வை : 288

மேலே