அவள்

அவள் எனைப் பார்த்தாள் பார்வையில்
இசைவு தெரிந்தது இல்லை ராகமாய் இசைத்தது
என் மனம் துள்ளி விளையாட
அவள் புன்னகைத்தாள் இதழ்கள் விரியாது
அதில் கூம்பிய இன்னும் மலரா தாமரைக் கண்டேன்
அதில் மயங்கி மௌனத்தில் நான் அவள் அழகில்,
இன்னும் இவன் என்னோடு பேசாது இருப்பதேன்
என்பதுபோல் அவள் சிரித்தாள் வாய்திறந்து
விரிந்த செந்தாமரைப்போல் அதில் முத்துக்கள்
தெரித்ததுபோல் ..... அவளருகே இப்போது நான்
கையில் ஏந்திவந்த சிவப்பு ரோசா செண்டைத் தர
தாமரை ஏற்றது ரோசாவை , பூவிற்கிடையே
காதல் அரும்ப ..... ஆயின் இன்னும் நான்
அறிந்தேன் ஆலன் பூவை அவள் யார்
அவள் மொழி யாது என்று
எங்களிடையே பேசியது காதல் மொழி ஒன்றே!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (7-Oct-19, 8:02 pm)
Tanglish : aval
பார்வை : 244

மேலே