கலைவாணி அத்துவாணி

செல்லிடப்பேசி உரையாடலில்
■■■■■■■■■■■■■■■■■■■■■■■
பாட்டிம்மா, என் மனைவி பொன்னாச்சிக்கு தலலப் பிரசவத்தில மூணு கொழந்தைகங்க பொறந்திருக்குது. ரண்டு பொண்ணுங்க. ஒரு பையன். நாங்க அமெரிக்காவில இருக்கிறது உங்களுக்குத் தெரியும். வழக்கமா நம்ம குடும்பத்தில பொறக்கிற கொழந்தைங்களுக்கு நீங்கதான் பேரு வைப்பீங்க. ஒரு பெண் குழந்தைக்கு 'கலைவாணி'ங்கிற பேர நாங்க முடிவு பண்ணீட்டோம். 'வாணி' ன்னு முடியற மாதிரி பேரை ரண்டாவது பொண்ணுக்கு நீங்கதான் வைக்கணும்.
@@@@@
ரொம்ப சந்தோசம்டா பேரப்பையா மருதமுத்து. ரண்டாவது பொண் கொழந்தைக்கு 'அத்துவாணி'ன்னு வைடா. ஒரு தலைவரோட பேரை வைக்கிறதில எந்தத் தப்பும் இல்லை. பையனுக்கு....?
@@@@@@
நீங்களே பேரு வச்சிடுங்க
@@@@@@@
எங் கொள்ளுப் பேரன் செல்வாக்கோட கோடீசுவரனா வாழணும். அதனால அவுனுக்கு 'அதானி'ன்னோ, 'அம்பானி'ன்னோ பேரு வச்சிடுடா மருது.
@@@@@@
மிக்க நன்றி பாட்டிம்மா

எழுதியவர் : மலர் (8-Oct-19, 10:54 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 98

மேலே