ஏனடி என்னைவிட்டு விலகினாய் 555

ப்ரியமானவளே...
நாம் சந்திக்கும்
ஒவ்வொரு நாளும்...
முதலில் எனக்கு முத்தங்களை
பரிமாறிவிட்டே என்னுடன் பேசுவாய்...
நீயோ இயல்பாக
பேசுவாய் என்னுடன்...
நான் முத்தங்கள் வாங்கிய
சந்தோஷத்தில் பேசமுடியாமல்...
இன்று நான் மட்டும்
தனிமையில் பேசிக்கொண்டு...
உன்னை
உயிராக நினைத்தேன்...
அதனால்தான் என்னவோ
உயிர்காக்கும் மருந்துக்கு
காலாவது தேதி போல்...
நீயும் என்னைவிட்டு
விலகினாயோ இன்று...
உயிராக உன்னை நினைத்தேன்
உறவாட வந்துவிடடி என்னோடு.....