உன்னை மட்டும்
முக்காடிட்டு முகத்தை மூடினால்
மாறிப் போகுமா சோகம்
முழுநிலவை மேகம் மூடமுடியுமா
நிலவொளிர அது தடையாகுமா
மகிழ்ச்சியை மறைத்ததே இல்லை
இகழ்ச்சி பற்றி ஏன்
கவலை
சிப்பியினுள்ளே ஒளிரும் முத்தாய்
உன் முகம் ஒளிருதடி
அதில் மறைந்திருக்கும் சோகம்தான்
என் மனதை நெருடுதடி
இருப்பது இருக்கட்டும் எதுவும்
உனக்காக மாறாதடி
முக்காடை விலக்கி நீ உன்னை
மட்டும் மாற்றிக்கொள்ளடி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
