நாணயம்
சொல்லிய சொல்லை இல்லையென மறுப்போர்!
கொடுத்த வாக்கை காக்க
மறப்போர்!
கலப்படம் செய்து பொருளை
விற்போர்!
விற்கும் பொருளின் தரத்தை குறைப்போர்!
நெறிதவறிய வழியில்
வருமானம் ஏற்போர்!
முறைபிறழ்ந்த கணக்கில்
வங்கியில் நிறைப்போர்!
ஊதியத்திற்கும் மேலாய்
உழைப்பை கறப்போர்!
நீதி ஒருசார்பாய் கூறி
மதி கெட்டு நிற்போர்!
பிறர் அறிவை தனதாகக்
கூறி தன்புகழ் சேர்ப்போர்!
பிறர் பொருளைக் கவ்வும்
களவும் கல்வி எனக்கற்போர்!
இவரெல்லாம்
நாணமின்றி நாணயத்தை
மறுப்போரோ?
அன்றி
நாணயம் என்றால்
எவ்வளவு நாணயம் என்போரோ?