புள்ளிகள்

புள்ளிகள்

கம்பிகளுக்குள்
சிக்க வேண்டிய
பெரும் புள்ளிகளான
கரும் புள்ளிகள்
சுதந்திரமாய்
காலத்திற்கும்
சுற்றிக் கொண்டிருக்க..

கம்பியாய் வளைத்து
பெண்டிர் இட்ட
கோலத்திற்குள்
அடைபட்ட கைதிகளாய்
எந்த வம்புக்கும் போகாத
சிறுசிறு
வெண்புள்ளிகள்...

எழுதியவர் : Usharanikannabiran (12-Oct-19, 9:53 am)
சேர்த்தது : usharanikannabiran
Tanglish : pulligal
பார்வை : 54

மேலே