விடியலை நோக்கி

திங்கள் இரவு 9 மணி।
இருண்டவானம் மழை வருவதற்கு அறிகுறிகள் காட்டி கொண்டு இருந்தது. முருகன் இன்னும் வரவில்லை மஞ்சுளா ஜன்னல் வழியாக கேட்டை எட்டி பார்த்து கொண்டு இருந்தாள் பதைபதைப்பான மனதுடன்। காலையில் நடந்த சம்பவங்கள் அவனை காயபடுத்தி விட்டதோ என எண்ணினாள்.
மஞ்சுளா நல்ல வடிவான குடும்ப பெண் என அவளின் மாமியார் பலமுறை சொல்ல கேட்டு இருக்கிறாள். மஞ்சுளா அப்பாவி தன் அத்தை மகன் முருகனை தன் திருமணம் செய்வேன் என்று பிடிவாதமாக நின்று மனம் புரிந்து கொண்டாள். முருகனும் அவளை பாசமாக பார்த்து கொண்டான். மஞ்சுளாவுக்கு வாழ்க்கை இனிமையாக இருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு வந்து கொண்டு இருக்கிறது என்பதை மறுப்பதற்குஇல்லை. குழந்தை இல்லை என நேர்முகமாக மனதை காயப்படுத்துகிறான்.
அவளும் சும்மா இல்லை கோவில் குளம் சென்று பல விரதங்கள் இருந்தாள், மருத்துவமனை சென்று தன்னை பரிசோதனை மேற் கொண்டாள் ஆனால்முருகன் ஒவ்வரு முறையும் வர மறுத்தான் வேறு வழி இல்லாமல் தன்னால் முயன்றதை செய்து அவன் மனதை மாற்ற முடிவு செய்தாள். குழந்தை பற்றி பேசினாலே அவன் முகம் குடுத்து பேச மறுக்கிறான் என்பதை புரிந்து கொண்டு அமைதி காத்து காலம் கனிய இறைவனை வேண்டினாள்.

கதவு தட்டும் சத்தம் கேட்டு நிஜஉலகுக்கு வந்தாள் மஞ்சுளா। முருகன் வந்து விட்டான் மனது லேசானது। உடை மாற்றி முகம் கழுவி வந்து அமர்ந்தான்। மெல்ல சென்று "சாப்பாடு கொண்டு வரவா" என்றாள் பதில் இல்லை திரும்பவும் கேட்டாள் பதில் இல்லை।
அதற்கு மேல் பொறுமை இல்லை அவளுக்கு " ஏன் இப்படி பண்ணறீங்க நான் என்ன செய்ஞ்சா உங்க கோவம் போகும் சொல்லுங்க " என்றாள்.
"நீ என் விட்டு போ அது போதும் நான் நிம்மதியா இருப்பேன் உன்னால் தான் என் சொந்தக்காரன் ஒருத்தனும் மதிக்க மாட்டிக்காரன்" என்று நெருப்பை அள்ளி கொட்டினான் முருகன்.
இந்த வார்தை கேட்ட பிறகு தான் உயிர் வாழ்வது முறை இல்லை என முடிவு எடுத்தாள். அறைக்குள் சென்று தாளிட்டாள் தான் சேலை எடுத்து சீலிங் பேன் கோக்கில் மாட்டி கழுத்துக்கு கொண்டு சென்றால் சேலை இறுகியது அதற்கு மேல் என்ன நடந்தது என்று தெரியவில்லை அவளுக்கு.
கண் விழித்து பார்த்த போது மருத்துவமனைல் இருந்தாள் முருகன் எதிரில் நின்றான். "நீ செத்து என்னை ஜெயிலுக்கு அனுப்பு பாக்கறியா டிஸ்சார்ஜ் ஆனதும் உன்னை டைவோர்ஸ் பண்ண போறேன் உன்னால எனக்கு தொல்லை" என சொல்லி விட்டு வெளியேறினான்.
"ஏன் என்னை பிழைக்க வைத்தாய் இறைவா " கண்ணீர் மல்க அழுதாள். அப்பொது தான் செவிலையார் ராதா அறைக்குள் வந்தாள் " என்னமா அழுகிற நல்ல வேளை கடவுள் புண்ணியத்துல
பொழச்ச நீ உன் வீட்டுக்கார் கரெக்ட் கொண்டு வந்து ஹாஸ்பிடல் ல சேத்து விட்ரு இல்ல அவ்வளவு தான்" என்றாள்.
மஞ்சுளா இருந்த மனோநிலையில் தாங்க முடியாமல் முருகனை பற்றி சொல்லி அழுதாள். அவளுக்கு ஆறுதல் சொன்ன ராதா "எல்லாத்துக்கும் வழி பிறக்கும் கவலை படாத".
ஈராண்டு, மூன்று நாட்கள் சென்றதும் மஞ்சுளாவை டிஸ்சார்ஜ் செய்தாரகள். வீட்டுக்கு வந்தும் முருகன் மஞ்சுளாவின் தாயாரை வர சொல்லி அவளை கூட்டிசெல்ல சொன்னேன். மனத்தை தயார் படுத்தி மஞ்சுளா பேச தொடங்கினாள் " நான் போறாங்க உங்களக்கு நிம்மதி கொடுக்க முடிவு பண்ணிட்டேன் அது மட்டும் இல்லை நான் தாய்யாக போறேன் உங்கள இல்ல என்றாள் கட்டமாக. ஹாஸ்பிடல்ல நர்ஸ் ராதா ஒரு குழந்தை இல்ல பணக்கார தம்பதியார் வாடகை தாய் தேடுவதா சொன்னாங்க நான் அது சம்மதம் சொல்லிட்டேன் இனி நீங்க என்னை வெளிய அனுப்ப வேண்டாம் அவங்க வந்து என்னை இப்போ கூட்டி போவாங்க. எந்த குழந்தைக்காக என்னை வேண்டாம்னு சொன்னிங்களோ அத குழந்தைக்காக அந்த பணக்காரங்க என்னை நல்ல பார்த்துக்க போறாங்க நான் இதை பணத்துக்காக செய்யலை இனி குழந்தை இல்லை என்று ஏக்கம் எனக்கு வாராது எப்பவும். டெலிவரி முடித்து என்னை அவங்க அனாதை ஆசிரமம் அட்மினிஸ்டர் பண்ணற வேலை தருவதாக சொல்லி இருக்காங்க இனி அங்க இருக்கற எல்லா குழந்தைகளும் என் குழந்தைகள் தான். என் உலகம் நீங்க தான் வாழ்தேன் ஆனா நீங்க எனக்கு வேற உலகத்தை காட்டிஇருக்கீங்க ரொம்ப நன்றி " என சொல்லி விட்டு முருகனின் இருண்ட முகத்தை பொருட்டு படுத்தாது வெளியேறினாள்।
தெளிந்த வானம் அவளை வரவேற்க தயார் ஆனது!!!।

எழுதியவர் : Priya Sivendran (15-Oct-19, 4:45 pm)
சேர்த்தது : Priya Sivendran
Tanglish : vitiyalai nokki
பார்வை : 371

மேலே