குட்டிக் குட்டி உளறல்கள்
உன் வீட்டு
கரடி பொம்மையும்
எனை ஏளனம் செய்யுதடி
நீ தினமும் அதை
கட்டிப்பிடிப்பதினால்
*****
அரிதாரம் வேண்டாமடி
உன்னை அழகாக்க
உன் வெட்கம் ஒன்றே போதும்...
*****
செவ்வானமும் பிச்சை கேட்குதடி!
உன் வெட்கத்தை…
தன் முகம் சிவக்க…!
*****
உன் விழி அம்பால்
காயப்பட்ட என் இதயம்
இன்று ஆய்வறையில்…
அணுக்கருவை விட..!
அதீத சக்தி
வேண்டுமாம் விஞ்ஞானிகளுக்கு…!
*****
எங்கே கற்றுக்கொண்டாய்!
பார்வையாலே…!
இதயத்தை இடமாற்றும்…!
அறுவை சிகிச்சையினை?
*****
தேன்கூட
கசந்ததடி
உன் முத்தத்தை
சுவைத்த பிறகு!
*****