மருத்துவ வெண்பா - யானைப் பால் - பாடல் 9

வைத்திய வித்வன்மணி சி.கண்ணுசாமி பிள்ளை இயற்றிய சித்தவைத்திய பதார்த்த குண விளக்கம் (1956) என்ற புத்தகத்திலிருந்து சில மருத்துவ சம்பந்தமான நேரிசை வெண்பாக் களையும், அவைகளின் பொருளும் குணமும் புத்தகத்தில் உள்ளபடி வெண்பாக்களின் நயத்திற்காகத் தருகிறேன்.

இதில் குறிப்பிடும் நோய்களைப்பற்றியும், மருந்துகளையும் தகுதியுள்ள சித்த மருத்துவர் களைக் கேட்ட பின்பே உபயோகிக்க வேண்டும்.

நேரிசை வெண்பா

வாதம்போந் தாதுபுஷ்டி வந்தடரும் வன்பலம்ஓ
யாதுபித்தங் கூடி யழகுதிக்குந் – தாதுமலர்த்
தேனைப்பா லிற்கலந்த தித்தீப்பைப் போலிருக்கும்
யானைப்பால் உண்ணு மவர்க்கு.

யானைப் பாலைப் பற்றியும் வெண்பா இருக்கிறது.

யானைப் பாலைக் கறக்க முடியுமா என்றும், குடிப்பவர்கள் உண்டா என்பதும் ஆச்சரியமளிக்கிறது.

குணம்:

யானைப் பாலை உண்பவர்களுக்கு அது மகரந்தம் நிறைந்த மலரிலிருந்து பெறும் தேனைப் பாலில் கலந்தது போன்ற தித்திப்புடன் இருக்கும்.

வாத கோபம் நீங்கும். தாது விருத்தியும், மிகுந்த பலமும், தீராத பித்தம் கூடி தேக அழகும் உண்டாகும்.

யானையின் சரீரம் அதிக வெப்பமானது. சூரியன் அஸ்தமனமான பின் இரவில் இரத்தத்தின் சூடு குறைந்து பால்தசைக் கோளங்களில் சேகரமாகும் பாலைக்,

காலையில் கறந்து உட்கொண்டால் தேக பலம், தேகக் கொழுமை, சுக்கில விருத்தி உண்டாகும்.

சூரியோதயத்திற்குப் பின் சுரக்கும் பாலை,

மாலையில் கறந்து உட்கொண்டால் பலவீனத் தையும், சந்துவாதத்தையும் உண்டாக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Oct-19, 10:02 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 46

சிறந்த கட்டுரைகள்

மேலே