நினைவுகள்
நாட்கள் நகர்ந்தன
நினைவுகளும் நிறைந்தன
துயர் மறந்து அனைவரும்
தூங்கும் நேரம்
கண் அயரா இரு விழிகள்
கண்ணீர் துளிகளுடன்!
மீண்டும் கிடைக்க நாட்களை
மீட்கத் துடிக்கும் நெஞ்சம்!
நட்பை அளித்த கல்லூரிக்கு
நகரத் துடிக்கும் கால்கள்!!
முதல் முறை சந்திப்பில் அறிமுகமான முகங்கள்;
விடுமுறையிலும் வீடு செல்ல மறுத்து களித்த விடுதி அரட்டைகள்;
வார இறுதியை வரவேற்று
வண்ணத்துப் பூச்சியாய் பறந்த நாட்கள்;
உரையாடலில் மூழ்கி
உறங்காமல் கழித்த இரவுகள்;
கேலி கலாட்டவுடன் கண்டு ரசித்த திரைப்படங்கள்;
கலகலப்பில் கவலையை மறக்க வைத்த வகுப்பறை;
நண்பர்களுடன் சுற்றித் திரிந்த சுற்றுலாத் தளங்கள்;
எங்கு சுற்றினாலும் திரும்பி வரத் துடிக்கும் கல்லூரி வளாகம்;
ஆம்!
இன்றும் மனம் துடிக்கிறது
கல்லூரிக்குச் செல்ல ...
நட்பினில் மூழ்க...
ஆனால்
நட்பிற்கு உடன் இருப்பது
வெறும்
கையெழுத்துகளும் புகைப்படங்களுமே...!!