இயற்கை

வித விதமாய் ரூபங்கள்
வித விதமான சுகந்தம்
பசுமையான இலைகள்
வித விதமான காய்கள்
அது கனிந்து தரும் பழங்கள்
பழங்களில் காணும்
வித விதமான ருசி ....துவர்ப்பு
இனிப்பு, இனிப்புடன் சிறிது புளிப்பு
என்று எண்ணிலடங்கா இவைகள்
இயற்கையின் விநோதங்கள்
படைத்தவன் ஒருவன் இல்லாது
இவை தாமாக வந்தவை என்றால்
இவற்றில் ஏன் இத்தனை விதங்கள்
இவையெல்லாம் ஒரு ரசாயன மாற்றங்கள்
என்றால் அந்த ரசாயன கூறு வந்ததெப்படி
தாமரை மலரைப் பார்த்தேன்
அதன் கொடியுடன், இலைகளுடன்
அந்த இலைகளின் மேல் துள்ளும்
இலையில் ஒட்டா பனித்துளிகள்....
அந்த மலர் தரும் மெல்லிய சுகந்தம்
அப்பப்பா என்னென்பேன் இந்த படைப்பை
அதோ அந்த சிறு முல்லையும், மல்லியும்
இப்படியோர் அழகு பூக்களா ....
ஒரு பெண் வாய்திறந்து முத்து
உதிப்பதுபோல் அல்லவா காட்சி தருகிறது

இயற்கை அன்னையின் மடியில்
தவழும் பிள்ளைகள் இவையெல்லாம்
பார்க்க பார்க்க பரவசம் தருபவை
எண்ணத்தை தூய்மைப் படுத்தி
மனதை இயற்கையோடு இரண்டற
கலந்துவிட செய்பவை.....

ஒரு சிறு மல்லிப்பூவை உண்டாக்க முடியா
மனிதன்.... இயற்கையோடு வாழ தெரியாது
கோணலான எண்ணத்தில் வாழ்வதேனோ ..

இயற்கையோடு இனைந்து வாழ்ந்தால்
இயற்கையில் எல்லாம் பெறலாம்
இறைவனையும் கண்டுகொள்ளலாம்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (19-Oct-19, 9:00 am)
Tanglish : iyarkai
பார்வை : 326

மேலே