சொர்க்கங்கள் பொன் மலர் தூவும்

கோள்கள் இடும் கோலங்களில்
தாள் பதித்து அவள் தாமரை கரம் பிடித்து
நடந்து வரும் போது
மண வாழ்க்கை தேன் சிந்தும்
மலர் தோட்டமாகும்
இல்லறம் தெய்வீக மணம் வீசும்
சொர்கங்கள் உவந்து வந்து
பொன் மலர் தூவும்
----கவின் சாரலன்