உயிர் பெறு மனமே

கிளியொன்றை கூண்டுல தான் அடைச்சு வைச்சேன் துணையாக கூடவே இருக்குமென.
கூண்டுல அடைச்ச கிளி கூடு விட்டு உயிர் போனதென்ன?

ரோஜாச் செடியொன்றை மண் சாடியில தான் நட்டு வளர்த்தேன் அது பூத்து வாழ்வில் வசந்தம் தான் வீசுமென.
நட்டுவச்ச ரோஜாச் செடியும் காரணமில்லாமல் பட்டுப் போனதென்ன?

நானொரு ராஜா என்று என் கனவுல தான் கோட்டை கட்டிவைச்சேன் என் விதி என் கையிலென.
கட்டி வைச்ச என் கனவு சுக்கு நூறாக உடைஞ்சதென்ன?

பாரமென நாம் நினைத்தால் இந்த உடல் கூட பாரம் தான்.
சிறு நம்பிக்கையில் துளிர்க்கும் வாழ்க்கை,
இடிந்தவை மீண்டும் கட்டப்படும் தன்னம்பிக்கை,
ஈடில்லா இழப்பில் துவண்டு விழாமல் மீண்டும் மீண்டும் எழுந்திட என்னால் செய்ய முடிந்ததை செய்யாமல் நான் சோம்பி இருந்தால் இறைவனா வந்து சோறிடுவார் என் உயிர் வாழ?

போனது போகுது வாரது வருது, வாழ்வில் என்ன கலக்கம்?
வேண்டாம் இனி உருக்கம்!
குடும்பம் என்பது கோவிலானால் அதில் உள்ள ஒவ்வொருவரும் தெய்வமன்றோ?
உள்ளத்தில் அன்பை தீபமென்றே ஏற்றி வை.
வறண்டு விடாத ஜீவ நதி உன்னில் உதயமாகி எங்கும் சந்தோஷத்தைப் பாயச் செய்யும்,
அந்நாளும் நீயும் உணர்வாய் அதற்கீடாக ஏதுமில்லை என்றே.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (22-Oct-19, 2:14 am)
பார்வை : 264

மேலே